eBook formats

எங்கள் தளம் magicauthor.com இல் உள்ள சுய-பிரசுர மின்புத்தகங்கள் மூலம், ஆசிரியர், வெளியீட்டாளர், புத்தக விநியோகஸ்தர் அல்லது விற்பனையாளர் ஆகியோருக்கு இடையேயான எல்லைகள் விரைவாக சுருங்கி விடுகிறது.

எலக்ட்ரானிக் புத்தகம் அல்லது மின் புத்தகம் என்பது அச்சிடப்பட்ட புத்தகத்தின் டிஜிட்டல் பதிப்பு ஆகும். ஒரு மின் புத்தகம் ePUB அல்லது PDF வடிவில் உருவாக்கப்படலாம். ePUB என்பது '.epub' எக்ஸ்டென்சனை உபயோகிக்கும் தொழில்துறை வடிவம் ஆகும். மின் பிரசுரம் என்பதன் குறுகிய வடிவமான இது பல ஈ-ரீடர்கள் மற்றும் அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் உள்ள மென்பொருளுடன் இணங்குவதாகும். எங்கள் ePUB புத்தக வடிவமானது அனைத்து ஆண்ட்ராய்டு ஃபோன்களில் உள்ள 'Google Play Books' செயலி மற்றும் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளில் உள்ள 'iBooks' செயலி மூலமாகத் திறக்கலாம்.

பொது டொமைனில் மிகவும் பரவலாக உபயோகிக்கப்படும் வடிவம் PDF, இது '.pdf' கோப்பு எக்ஸ்டென்சனை உபயோகிக்கிறது. அனைத்து ஸ்மார்ட்ஃபோன்களாலும் ஒரு PDF கோப்பைத் திறக்க முடியும். ePUB மற்றும் Pdf கோப்பு இரண்டின் இடையே இருக்கும் முக்கிய வேறுபாடு படிக்கும் அனுபவம் ஆகும். படிப்பதற்கு ePUB ஒரு படி அதிகமாக உள்ளது. ePUB இல் எளிதாகப் பாயும் HTML உரை திரையின் அளவிற்கு உள்ளே பொருந்தும். ஜூம் செய்தல் அல்லது திரையில் நகர்த்தல் போன்ற தேவைகளின்றி படிப்பவர்கள் எளிதாகப் படிக்கலாம்.

PDF இன் நன்மை என்னவென்றால் பக்கங்களின் லேஅவுட்டில் டெக்ஸ்ட் பொருந்தியுள்ளது, அதனால் ஒரு PDF கோப்பை அச்சிடுவது ePUB கோப்பை விட எளிதானது. எனவே, புத்தகத்தை அச்சு வடிவில் படிக்கச் விரும்பும் வாசகர்கள் PDF மின்புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து அதை அச்சிட்டுப் படிக்கலாம்.

MOBI என்பது ePUB கோப்பு வடிவத்தின் ஒரு சிறு மாறுதலடைந்த வடிவம் ஆகும். இது Amazon வழங்கும் அனைத்து Kindle சாதனங்களிலும் பயன்படுத்தலாம். Kindle பயனர்கள் MOBI மற்றும் ePUB கோப்பு வடிவங்கள் இரண்டையும் உபயோகிக்கலாம்.

MagicAuthor.com இல், ePUB, PDF மற்றும் HTML உள்ளிட்ட பல கோப்பு வடிவங்களில் மின்புத்தகங்களை உருவாக்க உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம். உருவாக்கப்பட்ட இந்த கோப்புகளை நீங்கள் எந்த வழியிலும் உபயோகிக்கலாம். நீங்கள் அவற்றைப் பதிவிறக்கி உங்களுடன் வைத்துக்கொள்ளலாம், பிற மின்வணிகத் தளங்கள் அல்லது உங்கள் தனிப்பட்ட வலைத்தளத்திற்கும் பதிவேற்றலாம். PDF கோப்புகளை அச்சிட்டு பிறருக்கு விநியோகிக்கவும் செய்யலாம். நீங்கள் எதையும் செய்யும் சுதந்திரம் உங்களுக்கு உண்டு. ஒரு ஆசிரியரான உங்கள் பயணத்திற்குத் தேவையான டூல்கள் மற்றும் யுக்திகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.